MARC காட்சி

Back
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்
245 : _ _ |a திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் -
246 : _ _ |a அக்னீஸ்வரர், தீவண்ணநாதர்
520 : _ _ |a திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலம். கொள்ளிக்காடர் என்று பதிகத்தில் இறைவனை சம்பந்தர் அழைக்கிறார். தீவண்ணநாதர் என்று வடமொழியில் இறைவனுக்கு மற்றுமொரு பெயர் உள்ளது. இங்குள்ள தேவியை பஞ்சின் மெல்லடியாள் என்று சம்பந்தர் கூறுகிறார். எனவே அம்மனும் இத்தலத்தில் அப்பெயரிலேயே அழைக்கப்படுகிறாள். சனிபகவானுக்குரிய சிறப்புத் தலமாக இத்தலம் விளங்குகிறது. திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ள திருக்கொள்ளிக்காடு பண்டு அடர்ந்த வனமாக அமைந்துள்ளது. நளனோடு இத்தலம் தொடர்படுத்தப்படுகிறது. இத்தலத்தில் முருகன் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். இது தனிச்சிறப்பாகும். நவக்கிரகங்கள் ஒன்றையொன்று பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளன.
653 : _ _ |a ஸ்ரீஅக்னீஸ்வரர் கோயில், திருக்கொள்ளிக்காடு, திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில், தீவண்ண நாதர், பஞ்சினும் மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி, தேவாரப்பாடல் பெற்ற தலம், பொங்குசனி, சனித்தலம்
710 : _ _ |a தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம்
902 : _ _ |a 04369 - 237454
905 : _ _ |a கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடியுள்ளனர். தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 115-வது தலம் இது.
914 : _ _ |a 10.64276756
915 : _ _ |a 79.60472345
916 : _ _ |a ஸ்ரீஅக்னீஸ்வரர்
917 : _ _ |a தீவண்ணநாதர்
918 : _ _ |a பஞ்சின்மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி
922 : _ _ |a வன்னி, கொன்றை, ஊமத்தை
923 : _ _ |a அக்னிதீர்த்தம்
925 : _ _ |a காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
926 : _ _ |a மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a சதுரவடிவமான கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். கருவறை விமானத்தின் வெளிப்புறச் சுவரில் உள்ள தேவக்கோட்டங்களில் வடக்கில் நான்முகன், தெற்கில் ஆலமர்ச் செல்வன், கிழக்கில் அண்ணாமலையாரும் உள்ளனர். அர்த்தமண்டபக் கோட்டங்களில் முறையே தெற்கில் கணபதியும் காட்டப்பட்டுள்ளனர். பைரவர், நவக்கிரகம், மகாலட்சுமி, சனீஸ்வரன் ஆகியோருக்கு தனி சிறுகோயில்கள் அமைந்துள்ளன. முகமண்டபத்தில் நந்தி சிற்பமும், நால்வர் சிற்பங்களும் உள்ளன.
930 : _ _ |a சனிபகவான் தன்னைக் கண்டு மனிதர்களும் தேவர்களும் பயப்படுவதை அறிந்து மிகவும் மனம் வருந்தினார். ஈசனை நோக்கி இத்தலத்தில் தவம் புரிந்தார். சிவபெருமானும் அக்னி வடிவில் தோன்றி சனிபகவானை பொங்கு சனியாக மாற்றினார். மேலும் இத்தலத்தில் சிவனையும், சனியையும் வணங்குபவர்களது சனிதோஷம் விலகும் என்று அருள்பாலித்தார். எனவே இத்தலத்தில் சனீஸ்வரன் குபேரமூலையில் இருந்து அனைவர்க்கும் செல்வவளங்களை வாரி வழங்குவதாக தலவரலாறு கூறுகிறது. நளனும் திருநள்ளாற்றில் அவரைக் கண்டு வணங்கிய பிறகு இத்தலத்திற்கு வந்து வணங்கி இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.
932 : _ _ |a இக்கோயில் எளிய அமைப்புடையது. கருவறை விமானம் ஒரு தளமுடையது. தாங்குதளத்திலிருந்து கூரைவரை கற்றளியாகவும், விமானம் சுதையாகவும் தற்போது அமைந்துள்ளது. எளிய அமைப்புள்ள தாங்குதளத்தைப் பெற்றுள்ளது. தாங்குதளத்திற்கு கீழே உபபீடம் எனப்படும் கருவறை விமானத்தின் உயரத்தை அதிகரிக்கும் தளம் காணப்படுகிறது. உபபீடத்தைத் தொடர்ந்து தாங்குதளம் உபானம், ஜகதி, உருளைக்குமுதம் ஆகிய உறுப்புகளைப் பெற்றும் பாதகண்டத்தில் யாளி வரிசையைப் பெற்றும் பிரதிபந்த அதிட்டானமாக விளங்குகிறது. பிரதிபந்த அதிட்டானம் என்பது அதிட்டானத்தில் அதாவது தாங்குதளத்தில் புடைப்புச் சிற்பங்களைக் கொண்டிருத்தலாகும். கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதிகளில் அரைத்தூண்களுக்கிடையே கோட்டங்கள் அமைந்துள்ளன. கோட்டங்கள் மகரத்தோரணம் எனப்படும் அலங்கார வளைவுகளைப் பெற்றுள்ளன. மகரத்தோரணத்தின் நடுவே புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. தேவகோட்டங்களில் இறையுருவங்கள் வடிக்கப்பெற்றுள்ளன. சுதையாலான விமானம் வட்டவடிவமாக காட்சியளிக்கிறது. கருவறை சதுரவடிவமானது. இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். கருவறை மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் இடதுபுறம் அம்மன் திருமுன் காணப்படுகின்றது. அர்த்தமண்டபம், முகமண்டபம் அமைந்துள்ளது. கோபுரங்கள் இடம் பெறவில்லை. முகமண்டபத்தில் நந்தி சிற்பமும், நால்வர் சிற்பங்களும் அமைந்துள்ளன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a பொன்வைத்த நாதர் கோயில், சாட்சி நாதர் கோயில்
935 : _ _ |a திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் 20 கி.மீ. தொலைவில் கச்சனம் அமைந்துள்ளது. கச்சனத்திலிருந்து மேற்கே 8 கி.மீ. தூரம் சென்றால் திருக்கொள்ளிக்காட்டை அடையலாம்.
936 : _ _ |a காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.00 வரை
937 : _ _ |a கச்சனம்
938 : _ _ |a திருநெல்லிக்கா
939 : _ _ |a திருச்சி, சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a திருவாரூர் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000072
barcode : TVA_TEM_000072
book category : சைவம்
cover images TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_வெளித்தோற்றம்-0004.jpg :
Primary File :

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_முழுத்தோற்றம்-0001.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_விமானம்-0002.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_விமானம்-0003.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_வெளித்தோற்றம்-0004.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_கூரை-0005.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_முகமண்டபம்-0006.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_தட்சிணாமூர்த்தி-0007.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_இலிங்கோத்பவர்-0008.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_பிரம்மன்-0009.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_கணபதி-0010.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_பைரவர்-0011.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_சனீஸ்வரர்-0012.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_நால்வர்-0013.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_நவகிரகம்-0014.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_சிவலிங்கம்-0015.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_வாயிற்காவலர்-0016.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_வாயிற்காவலர்-0017.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_முருகன்-0018.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_கல்வெட்டு-0019.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_கல்வெட்டு-0020.jpg

TVA_TEM_000072/TVA_TEM_000072_அக்னீஸ்வரர்-கோயில்_நடராஜர்-0021.jpg